பன்னீர்த் துளியாய் மண்ணில் உதிர்ந்து
உள்ளங்காலை சில்லென நனைத்து
காரையாராய்ப் பிறந்த ஓடை
முண்டந்துறையின் முகப்பில் பாயும்
சேர்வலாற்றின் கரம் பிடித்து
பாபநாச சிவனைச் சுற்றும்
பளிங்கு நீராம் தாமிரபரணி.
பொங்கிப்பெருகும் காவிரி வேண்டாம்
ஆழ்ந்த அகண்ட கங்கை வேண்டாம்
கூழாம் கற்களைத் தழுவி ஓடும்
மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆறே
ஆறெனத்தோன்றும்
என்றும் எனக்கு
nice.....kavithai
ReplyDeleteThank you. Are you a native of Tirunelveli district?
ReplyDelete