நல்ல இசை
மெதுவாக நடக்கத் துவங்கி, விறுவிறுவென்று படியில் ஏறி
நர்த்தனமாடி, ஸ்வரங்களில் திளைத்து
உச்சத்தைத் தொட்டு மீளும் சுகம் . . .
ஆணியடித்து நிற்க வைக்கும் ஓவியங்கள்
ஒரு அஸ்த்தமன பொழுதின் ஆழத்திற்குள்
ஒரு சில கணங்களில்
நம்மை இழுத்துக் கொள்ளும் திறன் . . .
அதிரவைக்கும்
நிலை நிறுத்தும்
எழுத்தின் வீச்சு . . .
கலைஞர்கள் இல்லையெனில்
மானுடம் என்னாவது?
மெலிதாக ஆடும் ஊஞ்சலும் வேப்பமரக் காற்றும்
கனமில்லாத எழுதுகோலும்
வேறென்ன வேண்டும் வாழ்வில்
சுயநலம் தான். மறுக்கவில்லை
ஆனால்
நான் யார் உயிரையும் எடுக்கவில்லை
யார் கனவையும் நசுக்கவில்லை
யார் நிலத்தையும் பறிக்கவில்லை
என் வழியே நான்
No comments:
Post a Comment