Friday, 4 January 2013


நல்ல இசை
மெதுவாக நடக்கத் துவங்கி, விறுவிறுவென்று படியில் ஏறி 
நர்த்தனமாடிஸ்வரங்களில் திளைத்து
உச்சத்தைத் தொட்டு மீளும் சுகம் . . .

ஆணியடித்து நிற்க வைக்கும் ஓவியங்கள்
ஒரு அஸ்த்தமன  பொழுதின் ஆழத்திற்குள் 
ஒரு சில கணங்களில் 
நம்மை இழுத்துக் கொள்ளும் திறன் . . .

அதிரவைக்கும் 
நிலை நிறுத்தும்
எழுத்தின் வீச்சு . . .
கலைஞர்கள் இல்லையெனில் 
மானுடம் என்னாவது?

மெலிதாக ஆடும் ஊஞ்சலும் வேப்பமரக் காற்றும்
கனமில்லாத எழுதுகோலும் 
வேறென்ன வேண்டும் வாழ்வில்
 சுயநலம் தான். மறுக்கவில்லை
ஆனால்
நான் யார் உயிரையும் எடுக்கவில்லை
யார் கனவையும் நசுக்கவில்லை
யார் நிலத்தையும் பறிக்கவில்லை

என் வழியே நான் 

 இயல்பு திரும்புமா 

பயணம் 
திடீரென்று அறிவிக்கப்பட்டது
அறியாத பாதை
ஆயின் அச்சமில்லை 

மேஜையை ஒதுக்கவும் 
சேர்த்து வைத்திருந்த சில பொருட்களை 
வகைப்படுத்தவும் நேரமின்றி போனபொழுது 
எண்ணங்களைக் கோர்த்தேன் 
மனம் சலனமற்று போனது.

விடைபெற சரியான தருணம்  
 வேலை ஒன்றும் மீதமில்லை
அப்படியே இருந்தாலும் அவை 
நான் இன்றி நன்றாகவே நடைபெறும்
நல்ல இளைப்பாறல் 
இனி போகலாம் என்றே நினைத்தேன்
ஏனோ தடங்கல் 

முதுவேனிற் காலம் நீள்கிறது.
பார்வை மாறிவிட்டது 
இயல்பு திரும்புமா 
தேவையில்லையோ  




விரயமானது என்ன?

சினம் எனும் சிலம்பு 
என்று கழன்று கொள்ளும்?
கர்ணனின் கவசக்குண்டலமா 
உதிரம் கொட்ட அரிந்துவிட . . . 

விரயமானது என்ன?
கை நழுவிய நாணயங்களா 
கட்டிக் காத்த மௌனமா 

. . . . .ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு 


Thursday, 3 January 2013



தூத்துக்குடி 

அம்மாவின் கை மண ம் வலையை மீறி மணக்கிறதே 
மின் வலையை, மீன் வலையை 
 சிறு பருவ நினைவலையை   

பாசியும் கடல் பஞ்சும் சிதறிக்கிடக்கும் 
அந்த அரவமற்ற கடற்கரையும்
அமானுஷ்ய பன ங் காடுகளும் 
சரசர க்கும் ஓலைகளில் பொதிந்திருக்கும் 
எத்தனையோ ரகசியங்களும் 
கண்ணீர் துளிகளும், இரத்தக்களறி யும் 

என் பிறந்த மண்