தேடித் தேடி அலைகிறேன்
ஒரு நல்ல பெட்டி வேண்டுமென்று
ரோலர் பெட்டி பல உ ண்டு,என்னிடம்
சாம்பல். கரு நீலம், ஆழ்ந்த கருப்பு என
வெண்ணையாய் வழுக்கும் தோல் பெட்டியும் உண்டு
ஆனால் இப்பொழுது தேவை
ஒரு அகன்ற அழுத்தமான பெட்டி
சக்கரங்கள் போக இறக்கைகளும் தேவைப் படலாம்
போகும் இடம் அப்படி
பொருட்கள் நிறைய சேர்ந்துவிட்டன
விட்டுச் செல்ல மனமில்லை
வந்தவை சேர்த்தவை எடுத்துக்கொண்டவை என
பல விதமான பொருட்கள்
இடமிருந்தால் சில நினைவுகள்
ஆனால் அவற்றால் என்ன பலன்
இங்கே அலுத்து வி ட்டது
இனி எடுப்பதற்கில்லை
எங்கே கிடைக்கும் பெட்டி சொல்லுங்கள் . . .
No comments:
Post a Comment