ஐந்து மணி நேரம் மின்சாரமின்றி
பதறி பதறி பணிகளை முடிக்க
சபித்துக்கொண்டே பழகிக்கொள்கிறோம்
இணைத்து வைக்கும் இளங்கரங்கள்
உருவிக்கொள்ளும் வேகம் பார்த்து
பெற்றோர் அதிரும் கோலம் பார்க்கிறோம்
ஏற்றுக்கொள்கிறோம்
காலையில் தோல்பை தோளில் துவள
நான்கு மணித்துளிகளில் தலைநகர் சென்று
வேலையை முடித்து அன்றிரவே மீள
வான ஊர்தி வழி செய்கிறது
ஆச்சரியமில்லை
உற்றார் உறவினர் உடைமையைப் பறித்து
தலையணை உறையில் காசினைப் பதுக்கும்
நீசத்தனமும் நடக்கவே செய்கிறது
இன்று
சலனமற்ற அன்பே அதிசயம்
பெற்றோர் போற்றும் பெரியோர் மதிக்கும்
தான் எனும் போர்வையை உதிர்த்து விட்டு
திடமாய் நிற்கும் இளைஞரே அதிசயம்
No comments:
Post a Comment