எங்கள் பன்னீர் மரம் தென்னை மரங்களை விட உயரமானது
நெடு நெடுவென்று இன்று நிமிர்ந்து நிற்கிறது
வீடு கட்டியவுடன் வைத்த கன்று
நான்கடி உயரமே இருக்கும்பொழுது இடுப்பு முறிந்து
காலுறை வைத்து என் மக்கள் இறுக்கி கட்டியதால்
மீண்டும் வளர்ந்து
இன்று பெய் மழை போல் பூக்களை பொழிகிறது
தெருவிலும் தன கரங்களை நீட்டி வெண்கம்பளம் விரிக்கிறது
பொத்தி பாதுகாக்கும் சரக்கொன்றை மரமோ
கை தொடும் உயரத்தில் நின்று நகைக்கிறது
வாடி வதங்கி பின் தளிர் விட்டு மறுபடியும்
வாடி வதங்கி சின்னஞ்சிறு முளை விட்டு . . .
இரு மரங்களும் ஒரே வருடம் வைத்தது தான்
ஏன் இப்படி என்று யோசிக்கிறேன்